Friday 30 November 2018

கஜா புயல் -கவிஞர் செல்வராஜா (9486106284)


                                       கஜா புயல்
                         -கவிஞர் செல்வராஜா
                             (9486106284)  


எங்களுக்கெல்லாம்
சோறு போட்டு
வாழ வைத்த
சோழ நாட்டை
கூறு போட்டு
தாழவைக்க வந்த
கஜா புயலே

உனக்கு
அப்படி என்ன ஒரு ஆணவம்?
இப்படி ஆடி விட்டாயே
கோர தாண்டவம்.

இது என்ன கொடுமை?
ஏற்கனவே
மீத்தேன் பிரச்சனையால்
எரியும் எங்கள் வயிற்றில்
நீ பீய்ச்சி அடித்த
தண்ணீர் கூட
எண்ணெய்யாக ஆகிவிட்டதே

அன்னை வேளாங்கண்ணி
நாகூர் தர்க்கா
தஞ்சை பிரகதீஸ்வரர்
இப்படி
மும்மதமும் சம்பவிக்கும்
புண்ணிய பூமியை
ஏய் கஜா புயலே
சின்ன பயலே
எப்படி துணிந்தாய்
அதை அழிக்க

நாங்கள் என்ன
ஏமாளிகளா
எங்ளை சோமாலியர்களாய்
ஆக்கத் துணிந்தாய்
நாங்கள் ப்பீனிக்ஸ் பறவைகள்
எரித்தாலும் உயிர்த்தெழுவோம்
வீழ்ந்தாலும் இன்னும்
வீரியமாக வாழ்வோம்
ஏனெனில்
நாங்கள் தமிழர்கள்.


Sunday 4 November 2018


கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-9         
                        
பாடல்-9         இனிய உளவாக (2015)
   இயக்கம்   :பாலசீனிவாசன்           இசைஜீவன் மயில்               பாடல் :கவிஞர் செல்வராஜா                          
     

  
பல்லவி/
ஆ/மெது மெதுவாய்
   மெது மெதுவாய்
   இதயத்திலே காதல் வந்ததே
பெ/மெது மெதுவாய்
   மெது மெதுவாய்
   உயிரினிலே உயிர் சேர்ந்ததே
ஆ/மெது மெதுவாய்
   வானம் பூமி இன்று
பெ/மெது மெதுவாய்
   காற்றும் பூவும் இன்று
   மெது மெதுவாய் (மெது மெதுவாய்… 
சரணம்/1
ஆ/ஏனோ புரியவில்லை
   ஏதும் அறியவில்லை
   எல்லாம் இன்பமயம் உன்னாலே
பெ/வார்த்தை வரவும் இல்லை
   வழியும் தெரியவில்லை
   விழிகள் சுமக்கிறதே நினைவுகளை
ஆ/மேகம் பூக்களை தூவுதே
   எனது ஏக்கம் நிறைவேறுதே
பெ/ எதிர் காலம் என் எதிர்காலம்
    காதல் என்பதால் நலமாகும்
ஆ/ எதிர் காலம் என் எதிர்காலம்
    காதல் என்பதால் நலமாகும்
பெ/ புதிதாய் புதிதாய்
ஆ/ புதிதாய் காதல் (மெது….மெதுவாய்…



Saturday 27 October 2018


கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-8         
                         
பாடல்-8       இனிய உளவாக (2015)
              இயக்கம் :பால சீனிவாசன்சீனிவாசன்          :                             இசை  : ஜீவன் மயில்

                 பாடல் :கவிஞர் செல்வராஜா                      
                                    

பல்லவி:
ஏய்…ரவுண்டு   ரவுண்டு   ரவுண்டு
ரவுண்டு  கட்டி  அடிப்பேன்
நான்  ரவுசு  ரவுசு  ரவுசு
ரவுசு  கட்டி குடிப்பேன்
நான்  காசு  காசு  காசு
காச அள்ளி இறைப்பேன்
சூர காத்து  காத்து  காத்து
காத்த போல பறப்பேன்
வாடி  வாடி  வனஜா
ஒன் வயசு ரொம்ப இளசா
                          (ரவுண்டு….

சரணம்/1
நான் சொடக்கடிச்சா போதும்
அந்த சொப்பன சுந்தரி நிப்பா
நான் கண்ணடிச்சா போதும்
அவ  சரக்க ஊத்தி வப்பா
வாலிபத்தின் முறுக்கு-அது
வரம்பில்லாம இருக்கு
கிட்ட வாடி சிலுக்கு-அடி
என்ன போட்டு உலுக்கு
ராத்திரி பகலும் தெரியவில்ல
ரைட்டும் தப்பும் எனக்கு இல்ல
வாலிப வயசுக்கு தடையேது
வாழத்தான் வாழ்க்கை விளையாடு
ஏய்  வாடி வாடி வனஜா
ஒன் வயசு ரொம்ப இளசா (ஏய்…வாடி..

சரணம்/2
நான் சாமியாட போறேன்
தீர்த்தம் கொஞ்சம் தெளிடி
நான் பூஜை செய்யப் போறேன்
சை டிஷ்ஸை வையடி
வரவு செலவு கணக்கு
அடி கவலை இல்ல எனக்கு
அள்ளி அள்ளி கொடுப்பேன்
நான் கில்லி போல அடிப்பேன்
இன்பங்கள் எனக்கு பொதுவுடமை
இளமைதான் எனக்கு தனியுடமை
அனுபவிக்கும் வயசுல அனுபவிப்பேன்
அட அனுதினம் வாழ்வ நான் ரசிப்பேன்
வாடி  வாடி வாடி வனஜா
ஒன் வயசு ரொம்ப இளசா
                         (ரவுண்டு…
      





Tuesday 23 October 2018


கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-7         
                        
பாடல்-7              இனிய உளவாக (2015)
                       இயக்கம்   :பால சீனிவாசன்                                                     
                                     இசை  : ஜீவன் மயில்
                                     பாடல் :கவிஞர்

செல்வராஜா

பல்லவி:
சகியே என் சகியே
சரிகம பத இசையே
உன்னாலே ரெட்டை இதயம்
என்னுள் இயங்குதடி
சுகியே என் சுகியே
சுகமான சகியே
மெளனத்தின் மொழியால் வந்து
காதல் சொல்லுறியே
விரல் பிடித்து செல்பவளே
வெறுக் கழுத்தை கொண்டவளே
உனக்காக தங்கத் தகடு
செய்ய சொல்லி வந்தேண்டி
                          (சகியே…
சரணம்/1
பேஸ் புக்கில் உன் பெயரை
பாஸ்வேர்டா வைப்பேனே
டுவிட்டிரிலே உன் முகத்தை
லைக் என்று கொடுப்பேனே
உன்னைக் காணா ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும் சரிகின்றேன்
உன்னைக் கண்ட ஒவ்வொரு நாளும்
புதிதாய் புதிதாய் பிறக்கின்றேன்
சுட்டி சுட்டி பேச்சால்
எனை சுண்டி சுண்டி ஈர்த்தாய்
சூது வாது இன்றி
காதல் சுமைதனை வார்த்தாய்
                            (சகியே…
சரணம்/2
போதி மரம் தேவையில்லை
உன் காலடியே போதுமென்பேன்
பூ முகங்கள் தேவையில்லை
உன் சிறு நகையே போதுமென்பேன்
சுடிதார் போட்ட சுந்தரியே
ஐஸ் கட்டி மழையை ஏன் பெய்தாய்
சும்மா கிடந்த என் மனசை
சுறுக்கென்று தானே ஏன் கொய்தாய்
நைல் நதி போல
என் நெஞ்சுக்குள்ள ஓட
கோடை வெய்யில் போல
நான் உன்னை எண்ணி வாட
நான் உன்னை எண்ணி வாட
                           (சகியே…      



Tuesday 16 October 2018


கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-6         
                        
பாடல்-6      இனிய உளவாக (2015)
                               இயக்கம்:பாலனிவாசன்                                                          

இசை  : ஜீவன் மயில்  
பாடல் :கவிஞர் செல்வராஜா


                                    
                                     

பல்லவி:
ஆ/ மானா மதுரயில
    என்ன மடக்கி புடிச்சவளே
    என்ன மடக்கி புடிச்சவளே
    என் மனச கெடுத்தவளே
          அந்தியூரு ஈரோட்டுல
    என்ன முந்தியில முடிஞ்சவளே
          என்ன முந்தியில முடிஞ்சவளே
          அள்ளி முத்தங்கள பதிஞ்சவளே
                       ஓன் அழகான தோற்றம் கண்டு
          அழுங்காம மயங்கிப் போனேன்....
          ஓஹோ...ப்ளீஸ் லவ்...மீ
           ஓஹோ...ப்ளீஸ்  லவ் ..மீ
சரணம்:1
      பெ/ செல்போனா நானிருக்கேன்
           கிட்ட வாயேண்டா
           சிம்கார்டை போட்டு நீயும்
           பேசி போயேண்டா
                  ஆ/ டீ...நகர் ஏரியாவா
            நானிருக்கேண்டி
            வேணுங்கிற பொருள யெல்லாம்
            வாங்கிப் போயேண்டி

         பெ/ பம்பரம் தொப்புளில் வேண்டாம்
             ஆம்லட்டும் தொப்புளில் வேண்டாம்
             கண்ணால காதல் பார்வை
             போதும் போதும் வாடா
                ஓ...கே...ஐ...லவ்...யூ
                                 ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                  ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                                                                 (மானா….

      சரணம்/2

      பெ/ தினத்தந்தி பேப்பர் போல
           நானிருக்கேண்டா
           தினம் ஒரு செய்தியைத்தான்
           படிச்சி பாரேண்டா
                   ஆ/பேஸ் புக்கா நானிருக்கேன்
            பக்கம் வாயேண்டி
            உன் பேஸைத்தான் காட்டி நீயும்
            மெம்பர் ஆயேண்டி       
         பெ/ கண்னால கலக்குற பையா
              காதல சொல்லுற மெய்யா
              மெட்ராஸை வாங்கித்தாடா
              கூட நானும் வாறேன்
          ஆ/ ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                 ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                                                                     (மானா....